Primary tabs
கலையும் இலக்கியமும் அந்தந்தக் காலத்திற்கு ஏற்பத் தம்
வடிவத்தையும் உள்ளடக்கத்தையும்
மாற்றிக் கொள்ளும். அப்படித்
தம்மை மாற்றிக் கொள்ளும் கலைகள் தாம் மக்களிடையே
செல்வாக்குப் பெற்றுத் திகழும். அந்த வகையில் தமிழகத்தில்
இருந்துவந்த மரபுக் கலைகள் தங்களது உருவங்களைச்
சற்றே
மாற்றிக் கொண்டுள்ளன. தற்கால ஓவியக்
கலையின் மீது
மேற்கத்தியத் தாக்கம் அதிம் உள்ளது. எனவே மரபு ஓவியக்
கலை
முற்றிலும் மாற்றம் பெற்றுப் பொதுமக்களால் எளிதில்
புரிந்து
கொள்ள இயலாத கலையாக வளர்ந்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து
சற்றுத் தூரம் தள்ளியே நிற்கிறது நவீன
ஓவியம். எனினும்
அவர்கள் புரிந்து கொள்ளுமாறு அவர்களின்
அறிவு, அனுபவத்
திறன்களை வளர்ப்பதன் மூலம் கலைகளின்
அடுத்த வளர்ச்சிக்குக்
கலைத்திறனாய்வாளர்கள் முயல வேண்டும்.