Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
செய்தித் தாள்களைப் பல்வேறு வடிவங்களில்
வெட்டி, அவற்றை வைத்துக் கொண்டு ஓவியம்
தயாரித்தலுக்கு ஒட்டோவியம் என்று பெயர். எண்ணெய்
மற்றும் வண்ணக் கலவை இவைகளினால்
ஈரமாக்கப்பட்ட ஓவியத் துணியில் காகிதத் துண்டுகளை
ஒட்டி இதனைத் தயாரிக்கலாம். வேலை வாய்ப்பு
விளம்பரங்கள், ஏல அறிவிப்புகள், புத்தக
விமர்சனங்கள் மற்றும் பல விளம்பரங்களைப்
பயன்படுத்தி இவ்வோவியம் தயாரிக்கப்படுகிறது.