தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 3-A01113 : மணிமேகலை

    இந்தப் பாடம் மணிமேகலை என்னும் காப்பியம் பற்றிப் பேசுகிறது. முதலில் காப்பியத் தலைப்பு, காப்பிய அமைப்பு முதலிய செய்திகளைக் கூறுகிறது. அடுத்த நிலையில் காப்பியத்தின் கதை சொல்லப்படுகிறது. அதன் பின்னர் காப்பியத்தில் இடம்பெறும் கதை மாந்தர்கள் பற்றியும், காப்பியம் உணர்த்தும் சமூகச் சிந்தனைகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படிப்பதால் சீத்தலைச் சாத்தனார் என்ற புலவர்தம் காலம், வரலாறு, அவரால் பாடப் பெற்றதாகக் கருதப் பெறும் பிற இலக்கியங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
மணிமேகலைக் காப்பியக் கதை, அதில் இடம்பெறும் பல்வேறு பாத்திரங்கள் பற்றியும், அவற்றின் சிறப்புப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மணிமேகலைக் காப்பியத்தின் கட்டமைப்பு, இலக்கிய உத்திகள், அதன் இலக்கியச் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மணிமேகலைக் காப்பியம் வழிச் சீத்தலைச் சாத்தனார் வலியுறுத்த விரும்பும் தலையாய சமூக அறம், சமய நீதி, அரசியல் திறம் முதலானவற்றை தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் சாத்தனார் காலத்தில் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பல்வேறு சமயங்களைப் பற்றியும், அவற்றின் கொள்கைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:54:12(இந்திய நேரம்)