Primary tabs
பெரியபுராணத்தைப் படிக்கும் பொழுதெல்லாம் பக்திச்சுவை
வெளிப்படுவது போல இலக்கியச் சுவையும் படிப்போரைக்
கவர்வதாய்
உள்ளது. சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும்,
பக்தி நூல்களிலும்
நல்ல பயிற்சி உடையவர் சேக்கிழார். இந்த
அனுபவத்தினால் இலக்கிய
மணம் கமழப் பெரியபுராணத்தைப் பாடி முடித்தார். சொல்லாட்சி,
கற்பனை, வருணனை,உவமைகள், அணி நலன்கள் முதலிய அனைத்தும்
பெற்றுப்
பெரியபுராணம் ஒப்பற்ற காப்பியமாக விளங்குகிறது. இவற்றைப்
பற்றி
விளக்கும் வகையில் இந்தப் பாடப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.