தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3-தொகுப்புரை

3.4. தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை கம்பராமாயணம் பற்றிக் காப்பிய அறிமுக நிலையில் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்க்கை வரலாற்றை முழுவதும் அறிந்திருப்பீர்கள். கம்பர் பற்றி வழங்கும் கதைகள் மற்றும் அவர் இயற்றிய நூல்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

  • கம்பர் வாழ்ந்த காலத்தை அறிந்திருப்பீர்கள்.

  • தென்னிந்திய மொழிகளில் இராமாயணம் இயற்றப்பட்ட வரலாற்றை அறிந்திருப்பீர்கள்.

  • பண்டைய தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பற்றிய நிகழ்ச்சிகள் எவ்வாறு பதிவாகி உள்ளன என்பதைத் தெரிந்திருப்பீர்கள்.

  • கம்பராமாயணக் காப்பிய அமைப்பும் ஒவ்வொரு காண்டத்தில் உள்ள கதை அமைப்பும் பற்றி அறிந்திருப்பீர்கள்.

1.

கம்பராமாயணம் எத்தனைக் காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

2.

கம்பராமாயணக் காண்டங்கள் இரண்டின் பெயரினைச் சுட்டுக.

3.

கம்பராமாயணப் படலங்களின் எண்ணிக்கையைத் தருக.

4.

சுந்தர காண்டத்தின் பெயர்ப் பொருத்தத்தை விளக்குக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:02:49(இந்திய நேரம்)