Primary tabs
ஏனியட்
எவ்வாறு விதியின் வலிமையைச்
சித்திரிக்கிறது?
மனிதர்களின்
வாழ்வு விதியின்
திட்டத்தின்
படியே அமைகிறது. இவ்வுண்மையை
உணர்ந்தவர்கள்
வாழ்க்கையில் ஏமாற்றங்களையும்
துன்பங்களையும்
சோர்வின்றி
எதிர்கொள்ளும்
வல்லமை
படைத்தவர்களாகிறார்கள். ஏனியட்டின்
கதை இக்கருத்தை
வலியுறுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. தனது சொந்த
விருப்பு வெறுப்புகளை விட்டு
விதியின் ஏவலுக்கு
அடிபணியும் ஏனியாஸ்
வாழ்க்கையில் வெற்றி
காண்கிறான். விதியின் வலிமையைப்
புரிந்து கொள்ளாத
டிடோ மற்றும் டர்னஸ்
தோல்வியைத் தழுவுகின்றனர்.