தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 3-A04143 : பதினெட்டாம் நூற்றாண்டு

    பதினெட்டாம் நூற்றாண்டில் சமய இலக்கியங்களும்
சிற்றிலக்கியங்களும் செழித்து வளர்ந்தன. வடமொழியில்
இருந்து புராணங்களை மொழி பெயர்ப்பது இந்த
நூற்றாண்டிலும் தொடர்ந்தது. இசுலாமிய, கிறித்தவ இலக்கிய
வகை தமிழில் தோன்றியது. நாட்டுப்புற வடிவங்களைப்
பின்பற்றித் தமிழில் இசுலாமிய நாட்டுப்புற இலக்கியங்கள்
தோன்றின. வரலாற்றுக் கருவூலங்களாகத் திகழும் வகையில்
சதகம், பள்ளு என்ற சிற்றிலக்கியங்களும் மக்களை
நல்வழிப்படுத்தும் நோக்கமுடையனவாகச்     செய்யுள்
நாடகங்களும், கீர்த்தனை     நாடகங்களும் நொண்டி
நாடகங்களும் தோன்றின. இசுலாமியப் புராணமான
சீறாப் புராணம்     தோன்றியது. இவற்றைப் பற்றி
இப்பாடத்தின் மூலம் அறியலாம்.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ, வைணவ
இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இசுலாமியத் தமிழ் இலக்கிய வகை பற்றிய அறிவு
பெறலாம்.
தமிழில் தோன்றிய இசுலாமிய நாட்டுப்புற வகைகள் பற்றி
அறியலாம்.
தமிழில்     தோன்றிய     வடமொழிப் புராணங்கள்,
சீறாப் புராணம், தேம்பாவணி பற்றி அறியலாம்.
செல்வாக்குப் பெற்ற சிற்றிலக்கிய வகைகள் பற்றி
அறியலாம்.
அத்வைத இலக்கியம், வீரசைவ இலக்கியம் முதலியவை
பெற்ற வளர்ச்சி பற்றி அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:26:57(இந்திய நேரம்)