தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

A05115l2-5.2 திராவிட மொழிகளில் மூவிடப் பெயர்கள்

5.2 திராவிட மொழிகளில் மூவிடப் பெயர்கள்

    மொழிகளுக்கு இடையில் உள்ள உறவை மூவிடப் பெயர்கள்
(Pronouns) உணர்த்துகின்றன. தன்னைக் குறிப்பது தன்மைப்
பெயர். நான், என், நாம் என்பன தன்மைப் பெயர்கள். முன்னால்
இருப்பவரைக் குறிப்பது முன்னிலைப் பெயர். நீ, நீங்கள், நின்
உன், உங்கள் என்பன முன்னிலைப் பெயர்கள். பிறரைச்
சொல்வது படர்க்கைப் பெயர். அவன், அவர், அவள், அவர்கள்,
அது, அவை என்பன படர்க்கைப் பெயர்கள். தன்மை,
முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களில் உள்ள
பொருள்களைக் குறிப்பதால் இவற்றை மூவிடப் பெயர்கள் என்பர்.
திராவிட மொழிகளில் மூவிடப் பெயர்கள் மாறாமல் உள்ளன.
காலப் போக்கில் சில மாறுதல்கள் ஏற்படலாம். எனினும்
அடியோடு மாறவில்லை. தம்முள் தொடர்பு உடையனவாக
உள்ளன.

சான்று:
    தன்மை இடப்பெயர்

யான், நான்
- தமிழ்
ஞான், யான்
- பழைய மலையாளம்
நானு
- கன்னடம்
நேனு
- தெலுங்கு


    தன்னுடன் தன்னைச் சுற்றி இருப்பவரையும் சேர்த்துச்
சொல்வது தன்மைப் பன்மை இடப்பெயர்கள். திராவிட
மொழிகளில் அவை அமைந்துள்ள விதம் வருமாறு:

நாம், நாங்கள், யாம்
தமிழ்
நாம், நோம் (சில இடங்களில்)
மலையாளம்
நாவு, ஆம், ஆவு
கன்னடம்
மேமு, மனமு
ஏ, மூ (பழைய இலக்கியம்)
தெலுங்கு

இவ்வாறே முன்னிலை,     படர்க்கை ஆகியவற்றிலும்
ஒற்றுமையைக் காணலாம்.

முன்னிலையை உளப்படுத்தாத பன்மை (Exclusive)
யாம், நாங்கள்
- தமிழ்
மேமு
- தெலுங்கு
முன்னிலையை உளப்படுத்தும் பன்மை (Inclusive)
நாம்
- தமிழ்
மனமு
- தெலுங்கு

பன்மையில்     முன்னிலையாரை     உளப்படுத்துவது,
முன்னிலையாரை உளப்படுத்தாதது என்ற வேறுபாடு ஆங்கில
மொழியில் இல்லை. We என்பது இருவகைக்கும் பொதுவாக
உள்ளது.


    ஆங்கிலம் முதலிய பல ஐரோப்பிய மொழிகளில் இணைப்பு
இடப்பெயர்கள் உள்ளன. who. which. where என்பன போன்ற
இணைப்பு இடப்பெயர்கள் தமிழிலும், பிற திராவிட மொழிகளிலும்
இல்லை. ஆனால் அவற்றுக்கு ஈடாகத் திராவிட மொழிகள்
பெயரெச்சங்களைக் கையாள்கின்றன.     வினையாலணையும்
பெயர்களைப் பயன்படுத்துகின்றன. செயலின் முடிவைக்
காட்டாதது எச்சம், பெயர்ச்சொல்லைத் தழுவி நின்று செயல்
முடிவு தருவது பெயரெச்சம் ஆகும். அதுபோலவே வினையைச்
செய்தவரைப் பெயர்ச் சொல்லாக நின்று குறிக்கும் சொல்
வினையால் அணையும் பெயர் ஆகும். இவை இரண்டும்
இணைப்பு இடப்பெயர்களாகச் செயல்படுகின்றன.

சான்று:    

ஆங்கிலம்

தமிழ்

1.
I saw the man who came
வந்த மனிதனைப்
பார்த்தேன்
the man who -இணைப்புச்
சொல்
வந்த - பெயரெச்சம்
2.
I saw him who came
வந்தவனைப் பார்த்தேன்
him who - இணைப்புச்
சொல்
வந்தவன் -
வினையாலணையும்
பெயர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 04:49:33(இந்திய நேரம்)