Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
மகிடாசுர மர்த்தினி சிற்பம் மகாபலிபுரம் மகிடாசுர
மர்த்தினி குடைவரையில் புடைப்புச் சிற்பமாகச்
செதுக்கப்பட்டுள்ளது. தேவி சிம்மத்தின் மீது அமர்ந்த
நிலையில் தனது கைகள் பலவற்றில் பலவிதமான
படைக்கலங்களை ஏந்திப் பாய்ந்து வருவது போலக்
காட்டப்பட்டுள்ளாள். தேவியின் பணி்ப்பெண்களும்,
பூத கணங்களும் கத்தி, கேடயங்களை ஏந்தி
வருகின்றனர். எதிரில் உள்ள எருமைத் தலை அசுரனும்
அவனது படையும் தோற்றுப் பின்வாங்குவது போல்
செதுக்கப்பட்டுள்ளது. தேவியின் திருக்கரத்தில் உள்ள
வில்லானது பிரயோக நிலையில் உள்ளது. தேவியின்
வாகனமான சிம்மம் கோபத்தோடு பாய்வது போல
அமைந்துள்ளது.