Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
நாயக்கர்களுடைய சிற்பங்கள் சுமார் 8 அடி
உயரத்துடனும், கம்பீரமான தோற்றத்துடனும்
காணப்படும். அலங்காரம் அதிக அளவில் இடம்பெறும்.
உதாரணமாக உடையலங்காரம், நகையலங்காரம்
ஆகியவற்றைக் கூறலாம். பக்கவாட்டுக் கொண்டை
அமைப்பு நாயக்கரது சிற்பக் கலை மரபிற்கே உரிய
பாணியாகும். ஆண் சிற்பங்கள், பெண் சிற்பங்கள் என
வேறுபாடு இன்றி அனைத்துச் சிற்பங்களிலும்
இவ்வமைப்பைக் காணலாம். தோள்கள் உருண்டு
திரண்டும், கண்கள் அகன்றவையாகவும், மூக்கு
கூர்மையானதாகவும், உதடுகள் பருத்து இளநகையுடனும்
காணப்படும். கை மற்றும் கால் விரல்களில் நகங்கள்
கூட இயற்கையான அமைப்பில் காட்டப்பட்டு
இருக்கும். பெண் உருவங்களில் மார்பகங்கள் பெரிய
அளவில் அமையும். முழங்கால் முட்டிகள்
வட்டமாகவும் கணுக்கால் சதைப் பற்றுடனும்
காணப்படும்.