தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.4 தொகுப்புரை

4.4 தொகுப்புரை

தமிழின் முக்கிய கலைப் பரிணாமமான நாடகக்கலை, பல
வடிவ மாறுதல்களையும், வளர்ச்சி மாற்றங்களையும் பெற்று
வந்துள்ளது. தமிழ் நாடகக் கலையின் இன்றைய சிறப்பான
நிலைக்குக் காரணமான     தவம் மேற்கொண்டவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள் சம்பந்த     முதலியார் அவர்களும்
சங்கரதாரசு சுவாமிகள் அவர்களும் ஆவர். நாடக ஆசிரியர்,
நடிகர், பயிற்றுவிப்பாளர் என விளங்கி, தமிழ் நாடக மேடையைத்
துளிர் விடச் செய்தவர்கள் இவர்கள். இதனாலேயே பம்மல்
சம்பந்த முதலியாரைத் தமிழ் நாடகத் தந்தை எனவும், தவத்திரு
சங்கரதாசு சுவாமிகளை தமிழ் நாடகப் பேராசிரியர் எனவும் தமிழ்
நல்லுலகம் போற்றுகிறது.

1.
சங்கரதாசு சுவாமிகள் எங்கே, எந்த ஆண்டில் பிறந்தார்?
2.
இசை நாடகங்கள்பால் சுவாமிகள் ஈடுபாடு காட்டக் காரணம் யாது?
3.
சுவாமிகள் என்ற அடைமொழி வரக் காரணம் யாது?
4.
எவ்வகைக் குறிக்கோளுடன் சுவாமிகள் நாடகம்
படைத்தளித்தார்?
5.
பாலர் சபை நாடக முறை என்றால் என்ன?
6.
தொழில் முறை நாடகக் குழு என்றால் என்ன?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:53:37(இந்திய நேரம்)