Primary tabs
இன்றைய
இயந்திர மயமான சூழலில் அறிவியல் வளர்ச்சி, தொழில்
வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி இவற்றின் காரணமாக நாட்டுப்புறக்
கைவினைக் கலைகள் நலிந்து வருகின்றன என்பதை மறுக்க இயலாது.
அறிவியல் முன்னேற்றம் பல விதங்களில் வளர்ச்சியை
ஏற்படுத்தினாலும் மரபு வழியாக வரும் தொழில்களின் நசிவிற்கு மூலமாக
அமைவதைக் ஆர்வம் கொள்ளுமளவிற்குத் தமிழர்கள் அக்கறை
காட்டுவதில்லை. மக்களின் நாகரிக மோகம் நமது கலைப்
பொருட்களை மறக்கச் செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பரம்பரையான கைவினைக் கலைஞர்களும் போதிய வருவாய்
இன்மையால் வேறு தொழில்களுக்கு
மாறி வருகின்றனர்.
எனினும், பூம்புகார் கைவினைப் பொருள் வளர்ச்சிக் கழகம், காதி
மற்றும் கிராமத் தொழில் வளர்ச்சி வாரியம், தென்னகப் பண்பாட்டு
மையம் போன்றவை நாட்டுப்புறக் கைவினைக் கலைகளை
வளர்த்தெடுப்பதில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.