Primary tabs
ஐங்குறுநூற்றுப் பாடல்களை அறிய முற்பட்டதில்
கீழ்க்காணும் செய்திகளை அறிய முடிந்தது.
களவு வாழ்க்கை இயற்கைப் புணர்ச்சியாக, பாலது
ஆணையில் தொடங்கி நான்கு வகைக் கூட்டங்களில்
நடப்பதை அறிய முடிந்தது. அதில் பாங்கியிற் கூட்டம்
மிகுதியாக இருந்ததை அறிய முடிந்தது.
கற்பு வாழ்க்கை களவின் வழியும், களவு வழி
அல்லாமலும் தொடங்கி இல்லறச் சிறப்பில்
மேன்மையுற்றதை அறிய முடிந்தது. அன்பின் மிகுதியை
வெளிப்படுத்தப் பிரிவுகளும் பிரிவுப் பாடல்களும்
மிகுந்த அளவிலிருப்பதை அறிய முடிந்தது.