Primary tabs
நடைச்சிறப்பு, பகுப்பு முறை, முறை வைப்பு, வரலாற்றைக்
கையாளுதல் போன்றவற்றால் தனித் தன்மை பெற்றுள்ளது.
இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளான கருத்து, கற்பனை,
உணர்ச்சி, வடிவம் ஆகியவை அகநானூற்றில்
சிறந்திருப்பதைக் காட்ட ஓரிரு எடுத்துக்காட்டுகள் மட்டுமே
சான்றாகத் தரப்பட்டன. அகநானூறு முழுமையும் இலக்கியச்
சுவையுடன் மிளிர்வதை முழுவதுமாகப் படித்து அறியலாம்.