தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D01125-5.7 தொகுப்புரை

5.7 தொகுப்புரை
    அகநானூறு ஐந்திணைகளிலும் நிகழும் களவு,
கற்பு என்ற இரு கைகோளிலும் அமைந்த பாடல்களைக்
கொண்டது. அகத்திணையின் அடிப்படைக் கூறுகளான
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன
சிறந்து விளங்குகின்றன. அகப்பொருள் நிகழ்வுகள்,
கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டே
வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கூற்றுகள் சிறப்பாக
அமைந்து அகநானூறு அகப்பொருண்மையில் சிறப்புற்று
விளங்குகிறது. இனிய நண்பர்களே! இப்பாடத்தில்
குறிப்பிடப்பெற்றுள்ள பாடல் எண்களைக் கொண்டு
அகநானூற்றுப் பாடல்களை மின்னூலகத்தில்
முழுமையாகப் படித்துச் சுவைக்கலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1

தலைவன் என்பான் யார்?

2

தேர்ப் பாகனின் பணி யாது?

3

பாங்கன் செய்யும் உதவி எந்தப் பெயரால்
குறிக்கப்படும்?

4

தோழியின் தாய் யார்?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:48:48(இந்திய நேரம்)