Primary tabs
வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என மேலை
நாட்டார் இலக்கியங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
இக்கொள்கை, காலத்தைக் கடந்தும் இடத்தைக் கடந்தும்,
தனிமனிதப் பழக்க வழக்கங்களையும் சமுதாய
நிலைகளையும் இலக்கியம் நமக்கு எடுத்துச் சொல்லுவதால்
ஏற்பட்டதாகும்.
தமிழில் இலக்கியத்தை இலக்கு + இயம் = இலக்கியம்
எனப் பிரித்துக் குறிக்கோளைக் கூறுவது என்று
பொருளுரைப்பர். எனவே, இலக்கியம் என்பது இருந்ததை
- இருப்பதை எடுத்துக் காட்டுவதோடு நில்லாமல் எப்படி
இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் இருக்க
வேண்டும்.. இந்த இரு நிலைகளிலேயே தமிழ் இலக்கியங்கள்
அமைந்துள்ளன. அவற்றுள் அகநானூறு குறிப்பிடத்தக்கது.
இப்பாடம் அகநானூறு காட்டும் சமுதாய நிலையை
விளக்குகிறது.