Primary tabs
பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரில் நீந்தி விளையாடுதலை
மக்கள் மிகவும் விரும்பியுள்ளனர்.
வட்டாடுதல், பந்துவிளையாடுதல், கழங்கு
விளையாடுதல் எனப் பல விளையாட்டுகளில்
இல்லத்திற்குள்ளும் இல்ல வளாகத்திற்குள்ளும் பெண்கள்
ஈடுபட்டிருந்தனர்.
வழிபாட்டின் அங்கமாகவும் விழாக்கள் நடந்துள்ளன.
திங்களை உரோகிணி கூடுகின்ற நிறைமதி (பௌர்ணமி)
நாளில் மாலை நேரத்தில் தெருக்களில்
மாலைகள் தொங்கவிட்டு, விளக்குகளை ஏற்றிக்
கார்த்திகைவிழாக் கொண்டாடியுள்ளனர்.
இதுபோலவே, கொங்கு நாட்டவர் உள்ளி விழா
என்ற விழாவை நடத்தியுள்ளனர். (368)