Primary tabs
பாடம்
- 3
இந்தப் பாடம் சிறுபாணாற்றுப்படையின்
41 முதல் 113
அடிகளுக்கு உரிய விளக்கத்தைத் தருகிறது.
நல்லியக்கோடனின்
அருள் உள்ளம், இரக்க குணம்,
கொடைத் தன்மை
ஆகியவற்றை நன்கு தெளிவுறுத்துகிறது.
மூவேந்தர்கள்
மற்றும் கடையெழு வள்ளல்களின்
உயர்ந்த உள்ளத்தைச்
சுட்டிக்காட்டி, அவர்களினும் மலோன உள்ளம்
கொண்டவன்
நல்லியக்கோடன் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பாணர்களின்
வறுமைத் துயரை உணரலாம்.
யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் என்னும்
உயர்ந்த கொள்கை கொண்ட பாணர்களின்
உள்ளத்தைப்
புரிந்து கொள்ளலாம்.
மூவேந்தர்களின் வள்ளல்
தன்மையை விளங்கிக்
கொள்ளலாம்.
கடையெழு
வள்ளல்களின் கொடை மேன்மையை
அறிந்து கொள்ளலாம்.