தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D03111-விடை


தன் மதிப்பீடு - II : விடைகள்

2.

முன்னம் என்னும் உறுப்பை விளக்குக.

இது அகப்பாட்டு உறுப்புகளில் எட்டாவதாக
இடம் பெறுவது. முன்னம் என்னும் சொல்லுக்குக்
குறிப்பு என்று பொருள்.     ஓர் அகப்பாடல்
வெளிப்படையாக உணர்த்தி நிற்கும் பொருள்
உண்டு. அதற்கும் மலோகப் பாடலின் பொருளைக்
கொண்டே அப்பாடல் யார் கூறியது? அதன்
உட்பொருள் என்ன? முதலான செய்திகளை எல்லாம்
உணரமுடியும். அவ்வாறு உணர்வதை முன்னம்
என்பர். "என் அழகை அவர் எடுத்துக்கொண்டு,
பசலை நோயை எனக்குத் தந்தார்" என்பதாக ஓர்
அகப்பாடல் அமைகிறது.     இதன் பொருளை
உற்றுநோக்கும்போது பசலை நோய் அடைதல்
பெண்டிர்க்குரியது என்னும் குறிப்பின் வழி இது
தலைவி கூற்று என்பதை உணர்கிறோம். இதுவே
‘முன்னம்’ எனப்படும்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 11:52:43(இந்திய நேரம்)