Primary tabs

மேம்பட ஒருபொருள் விளம்புதல் விசேடம்
. விசேட அணியின் வகைகள்
விசேட அணி ஐந்து வகைப்படும்.
அவை, குணக்குறை விசேடம், தொழில்குறை விசேடம், இனக்குறை விசேடம், பொருள்குறை
விசேடம், உறுப்புக்குறை விசேடம் என்பன ஆகும். இவற்றுள் குணக்குறை விசேடம்
என்பதைச் சான்றுடன் காண்போம்.
குணத்தால் குறை கூறிச் செயலால் மேம்பாடு தோன்றக் கூறுவது குணக்குறை விசேடம் எனப்படும்.
எடுத்துக்காட்டு
கோட்டம் புரிந்த; கொடைச்சென்னி - நாட்டம்
சிவந்தன இல்லை; திருந்தார் கலிங்கம்
சிவந்தன, செந்தீத் தெற
நாட்டம் - கண்கள்; திருந்தார் - பகைவர்;
கலிங்கம் - கலிங்க நாடுகள்.)
இப்பாடலின் பொருள்
கொடைத் தொழிலில் வல்ல சோழனுடைய அழகிய புருவங்கள் வளையத் தொடங்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் செங்கோல்கள் வளைந்து விட்டன. அச்சோழனுடைய கண்கள் சிவக்கவில்லை; ஆனால் அதற்குள் அவனுடைய பகைவர்களின் கலிங்க நாடுகள் எரியுற்றுச் சிவந்து விட்டன.
சோழன் பகைவர்கள் மீது சினம் கொள்வதற்கு முன்பே அவர்களுடைய நாடுகள் அழிந்துவிட்டன என்பது இப்பாடலின் கருத்து.
. அணிப்பொருத்தம்
பகைவர் நாட்டை அழிப்பதற்குத் தோன்றும் சினத்தை அறிவிக்கும் குணங்கள் புருவம் வளைதல், கண் சிவத்தல் ஆகியனவாம். ஆனால் இக்குணங்கள் சோழனுக்கு ஏற்படுவதற்கு முன்பே பகைவர் நாடுகள் அழிந்துவிட்டன என்று கூறியதால் குணத்தால் குறை இருப்பினும் செயலால் மேம்படுதலின் இப்பாடல் குணக்குறை விசேடம் ஆயிற்று.