Primary tabs
4.0 பாட முன்னுரை
தண்டியலங்காரம்
காப்பியங்களைப் பெருங்காப்பியம்,
காப்பியம் என இரு வகையாகப் பிரித்துக்
காட்டியது.தண்டியாசிரியருக்கு முன்னமேயே பல்வேறு காப்பியங்கள்தோன்றியிருந்தன. வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்டனவாகவும்
தமிழ் மொழியிலேயே தோன்றியனவாகவும் அவை இருந்தன.இவற்றையெல்லாம் வகைப்படுத்திக் காட்ட வேண்டிய
பிற மொழிகளின் தொடர்பாலும் இலக்கிய
தேவையினால் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் எனும் பாகுபாடு
தோன்றியது. தொடர்ந்து, வகைமைப் படுத்தும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன.