Primary tabs
4.3 புதிய
போக்கு
காப்பிய வகைமையின் புதிய
போக்கினை டாக்டர்
தமிழண்ணல் தொடங்கி வைத்தார் என்றே சொல்ல வேண்டும்.
அவரது புதிய நோக்கில் தமிழ்
இலக்கிய வரலாறு
பழமையை முற்றிலும் புறந்தள்ளி விடாமல்,அதே சமயத்தில்
புதிய நோக்கில் இலக்கிய வரலாற்றினை விளக்கியது .
4.3.1 பழைய
காப்பியங்கள்
தொல்காப்பியத்திற்கு
முன்பே தமிழில் வாய்மொழிக்
சிலப்பதிகாரம்
காப்பியம் என்ற முறையில் வியத்தகு
இந்த வகையில் தமிழண்ணல் வரையறை
சிலம்பின் தொடர்ச்சியாய் அமையும் மணிமேகலையோடு
பாரத நூல்கள் என்ற வகைமைக்குள்
வில்லிபாரதம்,
புராணங்களையும்,புராணக்காப்பியங்களையும் தனித்தனியே
கதைகளும், பெருங்காப்பியங்களும் தோன்றி இருக்கக்கூடும்
என்ற எண்ணத்தில் தமிழண்ணல் காப்பியங்களை
வகைப்படுத்தினார்.
தனித்தன்மை கொண்டதாக விளங்குகிறது. வாய்மொழி
இலக்கியமாகத் தோன்றி, பின்பு இளங்கோவால் வரைமொழி
இலக்கியமாக மாறியதையும் கருத்தில் கொண்டு, அது
பிற்காலத்தில்
பல்வேறு இலக்கியங்களால் எடுத்தாளப்
பட்டதையும் கருத்திலே கொண்டு
தமிழண்ணல் அதை முதற்
காப்பியம் என்கிறார். இது ஏற்புடையதே.
செய்துள்ளவற்றைப் பின்வருமாறு அமைக்கலாம் :
இணைந்து இரண்டும் இரட்டைக்
காப்பியம் ஆகும்.
இராமாயணங்கள் என்ற வகைமைக்குள்
இராமாயண நூல்கள்
அடங்கும். தமிழில் அகவல் வடிவில் ஓர்
இராமாயண நூல்
இருந்ததது; அதில் ஐந்து செய்யுட்கள் மட்டும்
இப்போது
கிடைக்கின்றன. சமண இராமாயணம்
ஒன்றும் இருந்துள்ளது.
கம்பராமாயணம் தோன்றிய பின்னர்ப்பிற இராமாயணங்கள்
செல்வாக்கிழந்தன.
நளவெண்பா, நைடதம் ஆகியவை அடங்கும்.
வகைப்படுத்தி, புராணங்கள் பல்கிப் பெருகக் காரணம்
சமண
சமயமே என்கிறார்.பெரிய புராணத்தையும்,கந்த
புராணத்தையும்
புராணக் காப்பிய வகைமைக்குள் கொணர்கிறார்.
தமிழில்
தோன்றியுள்ள புராணங்களும் திருவிளையாடற் புராணமும்,தல
புராணங்களும் இதில் அடங்கும்.
4.3.2
புதிய காப்பியங்கள்
இருபதாம் நூற்றாண்டில் புதுமைகளைக்
கொண்ட பழைய
மரபைப் பின்பற்றிய காப்பியங்களையும், புதுக்கவிதை போன்றபுதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களையும் பற்றிப் பார்ப்போம்.
· இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்
பாரதிதாசனின் பாண்டியன்
பரிசு, சஞ்சீவி பர்வதத்தின்
சாரல், புரட்சிக்கவி, வீரத்தாய்,தமிழச்சியின் கத்தி, இருண்டவீடு, எதிர்பாராத முத்தம்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
எழுதிய மருமக்கள்வழி மான்மியம் .
கண்ணதாசன் சங்க இலக்கியப் பாத்திரங்களைக்
கொண்டுபுனைந்த ஆட்டனத்தி ஆதிமந்தி .மாங்கனி.
முடியரசனாரின் பூங்கொடி,
வீரகாவியம்.
கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரதசக்தி
மகாகாவியம்.
டாக்டர் சாலை இளந்திரையனின் சிலம்பின்
சிறுநகை.
புலவர் குழந்தையின் இராவண
காவியம்.
இக்காப்பியங்களை இருபதாம் நூற்றாண்டுக்காப்பியங்களாகக்
குறிக்கலாம்.
யாப்பு வடிவத்தை உடைத்து, பாரதி, ந.பிச்சமூர்த்தி, தருமு
சிவராம், சி.மணி, வைதீஸ்வரன், பசுவய்யா
போன்றோரால்
வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் புதுக்கவிதை இயக்கம். எழுத்து இதழும், வானம்பாடி இதழும்
பெரியதாக வளர்த்தெடுத்த இப்
புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் சமீப காலமாய்
அதிகம்
படைக்கப்படுகின்றன. வெண்பா,ஆசிரியப்பா, வஞ்சிப்பா போன்ற
யாப்பு வகைக்குள் இடம் பெறவில்லை
என இவற்றைப்
புறந்தள்ளிவிட முடியாத அளவுக்குப் புதுக்கவிதை இந்நூற்றாண்டு
இலக்கியமாகி உள்ளது.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப்
புதுக்கவிதையில்
அமைத்து வாழ்க்கை வரலாற்றுக் காப்பியம்
படைத்த
வைரமுத்துவின் கவிராஜன் கதை புதிய முயற்சி. ந.பிச்சமூர்த்தி,
சி.சு.செல்லப்பா, சிற்பி, ஞானி ஆகியோரும்
புதுக்கவிதைக்
காப்பியங்களைப் படைத்துள்ளார்னர்.
இந்தியாவின் ஒப்பற்ற இதிகாசங்களைப்
புதுக்கவிதைக்
காப்பியமாக்கிய ஆனந்த விகடன் இதழ் வாலியைக்
கொண்டு
இப்பணியைச் செய்வித்தது. கவிஞர் வாலி
இராமாயணத்தை
அவதார புருஷன் எனும்
தலைப்பில் புதுக்கவிதைக் காப்பியத்
தொடராக ஆனந்த விகடனில் எழுதினார்.அவரே மகாபாரதத்தை
ஆனந்த விகடனில் புதுக்கவிதையாய் எழுதினார்.பாண்டவர்
பூமி
என்ற தலைப்பில் அது காப்பிய
நூலாய் வெளியானது.ஸ்ரீகிருஷ்ணரின் வரலாற்றை வாலி கிருஷ்ண
விஜயம் என்ற
காப்பியமாகப் படைத்தார்.
· மொழிபெயர்ப்புக் காப்பியங்கள்
· தெலுங்கு
· கன்னடம்
பிரபுலிங்க லீலை
எனும் காப்பியம் துறைமங்கலம்
சிவப்பிரகாச சுவாமிகளால் (17ஆம் நூற்றாண்டு) கன்னடத்திலிருந்து
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
· ஐரோப்பிய மொழிகள்
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
மில்டனின்
Paradise lost எனும் காப்பியத்தைத்
தமிழில் துறக்க நீக்கம்
என்று மொழி பெயர்த்துள்ளார்.
ஹோமரின் இலியத்தை
(Iliad) அனந்த நாராயண ஐயர்
மொழி பெயர்த்துள்ளார்.
ஹோமரின் ஒடிசியை
(Odyssey) ஓசியத்
என
அ.சிங்காரவேலு தமிழில் மொழி பெயர்ப்புக்
காப்பியமாகத்
தந்துள்ளார்.
சமஸ்கிருதத்தில் அமைந்த காதம்பரியை
ஆதிவர கவி
தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
· புதுக்கவிதைக் காப்பியங்கள்
மனுசரிதையும் வசுசரிதையும்
தெலுங்கிலிருந்து தமிழுக்கு
மொழி பெயர்க்கப்பட்ட காப்பியங்கள் ஆகும்.