Primary tabs
6.3 பரணி இலக்கிய
வகையின் வளர்ச்சி
மான வனுக்கு வகுப்பது பரணி
- (இலக்கண விளக்கப் பாட்டியல்)
போர்க்களத்தில்
ஆயிரம் யானைகளை யார்
வெல்கிறாரோ அந்த மாவீரனுக்கு வகுப்பது பரணி
ஆகும்
என இலக்கண விளக்கப் பாட்டியல் பரணிக்கு இலக்கணம்
வகுக்கிறது.
பரணி என்பது நட்சத்திரத்தின்
பெயராகும். பரணி
நாளில் கொண்டாடும் போர் வெற்றி விழாவைச் சிறப்பித்துப்
பாடும் இலக்கிய வகையே பரணி எனப்பட்டது.
பரணி நட்சத்திரத்தின் போது கொற்றவைக்குக்
கூழ்
இட்டு விழாக் கொண்டாடுவர். கொற்றவைக்கு உரிய நாள்
பரணி ஆகும்.
· பரணி இலக்கியத்தின் உறுப்புகள்
கடவுள் வாழ்த்து, கடை திறப்பு,
காடு பாடியது, பேய்
முறைப்பாடு, காளிக்குக் கூளி கூறியது, களம்
பாடியது,
வாழ்த்து எனப் பல்வேறு வகை உறுப்புகளைப் பெற்று, பரணி
இலக்கியம் அமைகிறது.
· பரணி இலக்கியத்தின் இயல்பு
· பரணி வகைகள்
பரணி இலக்கிய வகையானது பொதுவாகத் தோற்றான்
பெயரில் அமைந்து வெற்றி பெற்றோனின் சிறப்பினைக்
கூறுவதாக அமைகிறது.
நூற்றாண்டு
நூற்றாண்டு
பரணி
நூற்றாண்டு
பரணி
தேசிகர்
தேசிகர்
நூற்றாண்டு
நூற்றாண்டு
நூற்றாண்டு
6.3.1
கலிங்கத்துப் பரணி
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்
பரணி எனும்
நூலே காலத்தால் முற்பட்டது. குலோத்துங்க சோழனின்
படைத் தலைவனாகிய கருணாகரத் தொண்டைமான்,
அனந்தவர்ம சோடகங்கன் ஆண்டு வந்த கலிங்க நாட்டை
வென்றதைக் கலிங்கத்துப் பரணி பாடுகின்றது.
வல்லிசை வண்ணத்தால் போர்க்களக்
காட்சியைக்
கண்முன் கொண்டு நிறுத்துகிறார் செயங்கொண்டார்.
இகலொலி கடலொலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடும் எனுமொலி மிகைக்கவே.
எனும் பேரொலியோடு நாற்படையும்
நடை போடுகிறது.
சோழர் படை மிகப்பெரிய படை என்பதை உணர்த்த
,படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என வினவுகிறார்
செயங்கொண்டார். அவர்,
படை பெருத்தலின் பார் சிறுத்ததோ?
என்று பாடினார்.
தட்சனுக்கும் சிவபெருமானுக்கும்
இடையே நிலவிய
பகைமையையும் தட்சனை அவர் ஒடுக்கியமையையும்,
ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி பாடினார்.
சிற்றிலக்கிய வகைமை வளர்ச்சியில்
பரணி
இலக்கியத்தின் வளர்ச்சி முக்கியமானதாகும். போரின் வெற்றிக்
களிப்பு என்பது பாடுபொருளாக இருந்தாலும்,
தோல்வி
அடைந்த மன்னவனின் பெயரிலேயே பரணி இலக்கியங்கள்
அமைவதால், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை
மாற்று
முறையில் பதிவு செய்ததாகவும் கொள்ள இடமுண்டு.