தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.5- தொகுப்புரை

2.5 தொகுப்புரை

     இயற்கையில் பூத்து, இனிமையுடன் வாழ்ந்து வரும் நிகழ்வு ஆட்டக் கலையாக நாட்டுப்புற ஆடல்கள் உள்ளன. மண்ணின் மணம் பாடும் நாட்டுப்புற ஆடற் கலைகளாகக் கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம் போன்றவை இன்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றன. தெய்வ வழிபாட்டோடு கலந்தும், மகிழ்வுக் கலைகளாகவும் அவை உள்ளன. மாரியம்மன் வழிபாட்டுடன் கரகாட்டமும், முருக     வழிபாட்டுடன் காவடியாட்டமும், மயிலாட்டமும், துர்க்கை வழிபாட்டுடன் பொய்க்கால் குதிரை ஆட்டமும் இணைந்து விளங்குகின்றன. நாட்டுப்புற ஆடல்கள் இலக்கண வரையறைக்குட்பட்ட நிலையில்     செவ்வியல் ஆடல்களாக வளர்ந்து வந்துள்ளன.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.
பொய்க்கால் குதிரை ஆட்டத்தைச் சிலப்பதிகாரம் எப்படிக் குறிப்பிடுகிறது?
2.
தற்காலத்தில் தமிழகத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் யார்?
3.
பொய்க்கால்குதிரை ஆட்டம் பிற மாநிலங்களில் எப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன?
4.
மடலேறுதலுக்கும் பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்கும் உள்ள தொடர்பு யாது?
5.
பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் போது பயன்படும் இசைக் கருவிகள் யாவை?
6.
மயில் நடனம் பிற மாநிலங்களில் எப்பெயரால் அழைக்கப் படுகின்றது?
7.
மயில் நடனத்தைச் செவ்வியல் ஆடலாக்கியவர் யார்?
8.
மயில் கூடு உருவாகப் பயன்படும் பொருள்கள் சிலவற்றைக் கூறுக.
9.
மயில் நடனத்தின் பொழுது நடைபெறும் செயற்பாடுகளில் சிலவற்றைக் கூறுக.
10.
மயிலாட்டம் இன்று தனித்து ஆடப்படுகிறதா?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 16:34:23(இந்திய நேரம்)