தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  1. மணிப்புரி நடனத்திற்கும் பரத நாட்டியத்திற்கும் உள்ள உறவு நிலையைக் கூறுக.

    மணிப்புரி நடனம் பரத நாட்டியம் போல அரைமண்டி நிலையில் ஆடப்படாமல் இரு பாதங்களையும் சேர்த்து முழங்கால் சற்று வளைந்த நிலையிலேயே ஆடப்படும். இதில் உடல் அலை போல எழும்பியும், பாம்பு போன்று வளைந்தும் இளகிய நிலையில் காணப்படும். ஒவ்வொரு அசைவின் பொழுதும் வெவ்வேறு விதமான முத்திரைகளைப் பயன்படுத்துவர். ஒற்றைக்கை, இரட்டைக் கை முத்திரைகளுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், நிருத்த முத்திரை அதிகம் உபயோகப்படுத்துவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 16:38:37(இந்திய நேரம்)