திறனாய்வு அணுகுமுறைகள் பற்றித் தொடர்ந்து
பேசுகிறது.
ஒப்பியல் அணுகுமுறை, மொழியியல் அணுகுமுறை,
சமுதாயவியல் அணுகுமுறை ஆகிய மூன்று பற்றி
விளக்குகிறது.
மேற்கூறிய மூன்று அணுகுமுறைகளின் பண்புகளையும்
பணிகளையும் விளக்குவதோடு, தமிழிலக்கியத்தோடு
பொருத்திக் காட்டவும் செய்கிறது.
இவ் அணுகுமுறைகளின் சிறப்புக் கூறுகளன்றியும்
இவற்றிற்குப் பங்களிப்புச் செய்த திறனாய்வாளர்கள்
பற்றியும் குறிப்பிடுகிறது.