Primary tabs
தற்கால இலக்கிய
வகைகள் ஆகிய சிறுகதையும் புதினமும்
வளர்ந்து வரும் சிறந்த இலக்கியங்களாகும். இளநிலைப் பட்டம்
தமிழியல் பகுதி I பாடத்தில், சிறுகதையும் புதினமும்-சிறுகதை II
என்னும் தொகுதியில் சிறுகதை பற்றி ஆறு பாடங்கள் உள்ளன.
இவற்றுள் முதல் மூன்று பாடங்கள் படித்து விட்டோம்.
நான்காம் பாடம் சு.சமுத்திரத்தின் சிறுகதைகள்,
அதை
இப்போது பார்ப்போமா?
ஆசிரியர். சு.சமுத்திரம்
நூற்றுக் கணக்கான சிறுகதைகள்
எழுதி நாடறிந்த எழுத்தாளராகத் திகழ்ந்தவர். தலைசிறந்த தமிழ்
அங்கத எழுத்தாளர்களில் ஒருவர். வானொலி
மூலமும்
தொலைக்காட்சி மூலமும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற
ஓர் எழுத்தாளர்.