தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10125 - பிரபஞ்சனின் சிறுகதைகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பிரபஞ்சனைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும்
முதலில் குறிப்பிடுகிறது. அவர் சிறுகதைகளில் பெண்களின்
அவலங்களையும்,     குழந்தைகளின்     உணர்வுகளையும்
இரண்டாவதாகக் கூறுகிறது. பிரபஞ்சனின் சமுதாயப் பார்வை
பற்றியும், வரலாற்றுப் பார்வை பற்றியும் எடுத்துரைக்கிறது.
பிரபஞ்சனின் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் பற்றிக்
கூறுகிறது. இறுதியாக, அவரது பாத்திரப் படைப்பு, கையாளும்
உத்தி, மொழி நடை ஆகியவை பற்றிக் கூறுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
பிரபஞ்சனைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும்
அறிந்து கொள்ளலாம்.
பிரபஞ்சனின் சிறுகதைகளில் இடம் பெற்ற சமுதாயக்
கருத்துகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
பிரபஞ்சனின் சிறுகதைகள் எத்தகைய போக்கும் நோக்கும்
கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பாத்திரப் படைப்பின் தன்மை, கையாளும் உத்திகள்,
மொழிநடை ஆகியவை மூலம் பிரபஞ்சனின் படைப்பாற்றலை
உணர்ந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:25:59(இந்திய நேரம்)