தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

தொகுப்புரை

4.6 தொகுப்புரை

மு.வ.வின் வாழ்வும் பணியும் தமிழ் இலக்கியம் பயிலும்
மாணவர்களுக்கு ஊக்கம் தரவல்லன. மு.வ. பள்ளியாசிரியராக
வாழ்வைத் தொடங்கிப் பல்கலைக் கழகத்தில் துணை
வேந்தராக உயர்ந்தவர்; அவர் 85 நூல்களைப் படைத்துள்ளார்.
அவரது படைப்புகளுக்கு பரிசும் பாராட்டும் பெற்றார். மு.வ.
தமிழ் உரைநடைக்கு வழங்கிய பங்களிப்பை,
 

(1)
புனைகதை
(2)
இலக்கிய ஆய்வுகள்
(3)
கடித இலக்கியம்
(4)
திருக்குறள் தெளிவுரை
(5)
வாழ்க்கை வரலாற்று நூல்கள்

என்று ஐந்து     வகைப்படுத்திக்     காணலாம்.
புனைகதைகளில் மொழிநடைப் புதுமையும், இலக்கிய
ஆய்வுகளில் தமிழின் இனிமையும், கடித இலக்கியத்தில்
புதுமையும், திருக்குறள் தெளிவுரையில் வள்ளுவத்தை எளிய
முறையில் எடுத்துரைத்தமையும், வாழ்க்கை வரலாற்று
நூல்களில் காட்சிப் படைப்பும் மு.வ. தமிழ் உரைநடைக்கு
வழங்கிய பங்களிப்பு எனலாம்.

மு.வ.வின் உரைநடையின் தனித்தன்மைகளாக எளிமை,
தெளிவு, தூய்மை, செம்மை, இனிமை, எனவரும் ஐந்து
கூறுகளைக் குறிப்பிடலாம். எளிய சொற்களைக் கொண்டு சிறிய
சொற்றொடர்களில் தனித்தமிழ் நடையில் செம்மை நிறை
வடிவில் தமிழின் இனிமை வெளிப்படும் வகையில் அமைந்ததே
மு.வ.வின் உரைநடை எனலாம். மு.வ.வின் உரைநடையில்
உவமை, எதுகை மோனை நயங்கள் சொல்லாட்சி
முதலியனவும் அமைந்துள்ளன என்பதற்குப் பல சான்றுகள்
காணப்படுகின்றன.



 
1.
மு.வ.வின் உரைநடையின் தனித்தன்மைகளை எத்தனை
வகைப்படுத்தலாம்?
2.
மு.வ.வின் உரைநடை எளிமையானது என்பதற்கு ஓர்
எடுத்துக்காட்டுத் தருக.
3.
மு.வ.வின் உரைநடையின் தெளிவுக்கு ஓர்
எடுத்துக்காட்டுத் தருக.
4.
மு.வ. பயன்படுத்தியிருக்கும் ஆங்கிலச் சொற்கள்
ஐந்தினை எழுதுக.
5.
மு.வ.வின் உரைநடையில் தமிழின் இனிமை
புலப்படுவதைச் சுட்டுக.
6.
மு.வ.வின் உரைநடையில் காணப்படும் இலக்கிய
உத்திகள் எத்தனை?
7.
மு.வ.வின் உரைநடையில் அமைந்திருக்கும் உவமை
நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
8.
எதுகையும் மோனையும் மு.வ.வின் உரைநடையில்
அமைந்திருத்தலைச் சுட்டுக.
9.
மு.வ.வின்     உரைநடையில் அமைந்திருக்கும்
சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
10.
இலக்கியத் திறனாய்வு குறித்து மு.வ. எழுதிய இரு
நூல்களைக் குறிப்பிடுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:28:48(இந்திய நேரம்)