Primary tabs
இந்தப் பாடம் நாடகத்தைப் பற்றிய ஓர் எளிமையான
அறிமுகத்தைத் தருகிறது. நாடகம் என்னும் சொல்லுக்குரிய
விளக்கத்தைத் தருகிறது.
உலக அளவில் நாடகத் தோற்றத்துக்குரிய
பின்னணி என்ன
எனச் சொல்கிறது.
நாடகத் தோற்றத்தில் சமயத்தின் பின்னணி
என்ன என்பதைப் பற்றிச்
சொல்கிறது.
இந்தியாவில் நாடகத்
தோற்றம், தென்னிந்திய
மொழிகளில் நாடகத் தோற்றம்
ஆகியவை பற்றிக் கூறுகிறது. தமிழ்
நாடக இலக்கணம் பற்றிக்
கூறுகிறது.
- நாடகத்
தோற்றத்தில் சமய உணர்ச்சி, மகிழ்வு உணர்ச்சி,
விளையாட்டு உணர்ச்சி, போலச் செய்தல் உணர்ச்சி ஆகியன
எந்த அளவு பங்கு வகிக்கின்றன என்பதை அறியலாம்.
- நாடகத்துக்கு
முன்னோடிகளாக விளங்கிய பொம்மலாட்டம்,
தோல்பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகியன பற்றி
அறிந்து கொள்ளலாம்.
- திராவிட
மொழிகளில் நாடகத் தோற்றம் பற்றி அறிந்து
கொள்ளலாம்.
- தமிழ்
நாடக இலக்கணம் பற்றி அறிந்து கொள்ளலாம்.