Primary tabs
பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்துக்கும் நாடகக்கலை
வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் மிகப்பல. ‘தமிழ் நாடகப்
பேராசிரியர்’ என்று அவரைப் போற்றுவது மிகவும்
பொருத்தமானதாகும். அவரது நாடகக் கலைப் பணியைப்
பின்வருமாறு தொகுத்துக் காணலாம்.
1) இசைப்பாடல் வடிவம் கொண்டிருந்த தமிழ் நாடகத்தை
உரைநடைக்கு மாற்றினார்.
2) நாடகத்தில் பின்பாட்டு முறையை நீக்கினார்.
3) நாடகத்துக்குப் பயன்பட்ட இசைக் கருவிகளில் தாளத்தை
அகற்றினார்.
4) நாடக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சுகுணவிலாச
சபை என்னும் பெயரில் ஒரு நாடக சபையை நிறுவினார்.
5) மொழிபெயர்ப்பு நாடகங்களைத் தமிழ்நாடக உலகில்
புகுத்திப் புதிய கதைப் பொருளைத் தேர்வு செய்வதற்கு
வழிவகுத்தார்.
ஆக்கியபோது என்ன பெயரிட்டு அந்த
நாடகத்தை ஆக்கினார்?