Primary tabs
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் வாழ்ந்த நாடகக்
கலைஞர்களுள் ஒருவரான பம்மல் சம்பந்த முதலியாரின்
வரலாற்றையும் நாடகக் கலைப் பணியையும் இந்தப் பாடம்
சொல்கிறது.
ஆங்கில நாடகங்களை மட்டுமே விரும்பிப் பார்த்துக்
கொண்டிருந்த சம்பந்த முதலியாருக்குத் தமிழ் நாடகங்களை
உருவாக்குவதில்
எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது என்பதை
இந்தப்
பாடம் விளக்குகிறது.
தமிழில் எத்தனை நாடகங்களை அவர் எழுதினார், அவற்றில்
மொழிமாற்றம் செய்த நாடகங்கள் எத்தனை என்ற விவரத்தைச்
சொல்கிறது.
நல்ல கல்வியும் அரசாங்கப் பதவியும் இருந்தும்கூட நாடகக்
கலை வளர்ச்சிக்காக அவர் எவ்வாறு தம்மை ஆட்படுத்திக்
கொண்டார் என்பதைச் சொல்கிறது.
நாடகக் கதைகளில் அவர் செய்த புதுமைகளைச் சொல்கிறது.
- இந்தப் பாடத்தைப் படிப்பதால் பம்மல் சம்பந்த முதலியார்
நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டினைத் தெரிந்து
கொள்ளலாம்.
- பம்மல் சம்பந்த முதலியாருக்கு முன் நாடகங்கள் எவ்வாறு
இருந்தன என்பதையும் தம் காலத்தில் இவர் எத்தகைய
மாற்றங்களைச் செய்தார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
- ஆங்கிலம், வடமொழி ஆகிய வேற்று மொழி நாடகங்களைத்
தமிழில் மொழிமாற்றம் செய்து மேடை ஏற்றியதை அறியலாம்.
- தமிழ் நாடக மறுமலர்ச்சிக்கு இவரது பணி எந்த அளவிற்கு
உதவியது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
- ஓர் அமைப்பை ஏற்படுத்திச் செயல்படுத்துவதன் மூலமே எந்த
ஒரு பணியையும் வெற்றிகரமானதாக மாற்ற முடியும். அந்த
அடிப்படையில், சுகுணவிலாச சபை என்ற நாடக அமைப்பை
இவர் ஏற்படுத்தி நாடகச் சேவையைத் திட்டமிட்டு
வளர்த்ததை அறியலாம்.