தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.0

4.0 பாட முன்னுரை

    கவிதை, கல்வெட்டு, இசை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு
துறைகளிலும் தம் முத்திரையைப் பதித்தவர்     கவிமணி
தேசிகவிநாயகம் அவர்கள். அவர் கவிதையை உயிராக
நேசித்தவர். கவிமணியின் கவிதைகள் உணர்ச்சி நிறைந்தவை.
‘என் எழுத்தும் தெய்வம்; என் எழுதுகோலும் தெய்வம்’ என்று
கூறிய பாரதியின்     கவிதைகளில்     தம்     உள்ளத்தைப்
பறிகொடுத்தவர் கவிமணி.

    “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
    பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
    கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா ! - அந்தக்
    கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா.”


என்ற பாடலைக் கவிமணி பாடியதன் மூலம் அவருக்குப் பாரதி
மீதிருந்த மதிப்பை உணர்ந்துகொள்ளலாம். எளிமையாகப்
பாடுபவர்; இனிமையாகப் பாடுபவர். குழந்தைகளுடன் குழந்தையாக
வாழ்ந்தவர். பழமையின் பாதுகாப்பில் புதுமைக்குப் பாலம்
அமைத்தவர். இத்தகைய சிறப்புடைய கவிமணியின் உள்ளத்தை
இனிக் காணலாமா?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:11:37(இந்திய நேரம்)