தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 2-P10332

சிற்றிலக்கியத்தின் வகைப்பாடுகள்

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • சிற்றிலக்கிய வகைகளில்     ஒன்றாகிய குறவஞ்சி
    இலக்கியம், அதன் பெயர்க்காரணம், பெயர் பெறும்
    முறை, தோற்றம், வளர்ச்சி, அமைப்பு என்பன பற்றித்
    தெளிவாக அறிந்து கொள்வீர்கள்.
  • மற்றொரு சிற்றிலக்கிய வகை ஆகிய தூது என்பதன்
    சிறப்புகளை விளங்கிக் கொள்ளலாம்.
  • மடல் என்பதன் பெயர்க்காரணம், மடல் ஏறுதல் பற்றிய
    செய்திகள், வேறு பெயர்கள், மடல் இலக்கிய மரபு,
    இந்த மரபில் ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி என்பன
    பற்றிய விளக்கங்களைப் பெறலாம்.
  • உலா என்ற இலக்கிய வகையின் பெயர்க்காரணம்,
    இலக்கணம், தோற்றம், வளர்ச்சி, பிற செய்திகள்
    என்பனவற்றை இனம் காணலாம்.
  • பள்ளு இலக்கிய வகையின் தோற்றமும், வளர்ச்சியும்,
    அதில் கூறப்படும் செய்திகள், பண்புகள் முதலியனவற்றை
    அறிந்து கொள்ளலாம்.
  • கலம்பகத்தின் பெயர்க்காரணம், சொல் அமைப்பு,
    தோற்றம், வளர்ச்சி, கலம்பக உறுப்புகள், பாடல்
    எண்ணிக்கை, சிறப்புகள் முதலியன விளங்கும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:44:15(இந்திய நேரம்)