தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

4)
போர்க்காட்சியை விளக்குக.

    
    போரில் இருதரப்பு அம்புகளும் மேலே விழுவதால்
வீரர்களின் தலைகள் எல்லாம் கீழே கொட்டுவது போல
விழுந்தன.

    வீரபத்திரரின் பூதகணங்கள் மேகங்களாக மாறி, கோபம்
மிகுவதற்காக ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்பின.

    தேவர்கள் விட்ட அம்புகளுக்கு எதிர் அம்புகளாக
மிகுதியான மழை நீராகிய அம்புகளை விட்டன.

    காலாட்படையும் காலாட்படையும் மோதிக்கொண்டன.
தேர்ப்படையும் தேர்ப்படையும் மிகுதியாக மோதிக்கொண்டன.

    ஈட்டியும், ஈட்டியும் மிகுதியாகப் பாய்ந்து நிறைந்ததால்
யானைகள் இறந்து போயின.

    தோளும் தோளும் மோதிக்கொண்டன. கால்களும்
கால்களும் தளராது நிலைபெற்றுப் போர் புரிந்தன என்று
போர்க்களக் காட்சியைக் கண்முன் ஆசிரியர் நிறுத்துகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:54:47(இந்திய நேரம்)