Primary tabs
2.0 பாட முன்னுரை
கடந்த பாடத்தில் சிறந்த மொழிபெயர்ப்பு எப்படி அமைய
வேண்டும் என்றும், மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையக்
கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்றும் நீங்கள்
அறிந்திருப்பீர்கள்.
‘இலக்கிய மொழிபெயர்ப்பு வரலாறு’ என்ற இந்தப்
பாடத்தில் பொதுவாக இலக்கிய மொழிபெயர்ப்பு
என்றால்
என்ன என்பது பற்றியும், இலக்கியங்களை
மொழிபெயர்ப்பது
என்பது எவ்வளவு பழமை வாய்ந்தது
என்பது பற்றியும்,
தொடர்ந்து காலந்தோறும் என்னென்ன
மொழிபெயர்ப்புகள்
எந்த எந்த இலக்கியத்
துறைகளில் மொழிபெயர்க்கப்
பட்டுள்ளன என்பது பற்றியும்
அறிய இருக்கிறீர்கள்.
தமிழிலிருந்து பிறமொழிக்கும் பிற
மொழிகளிலிருந்து தமிழிற்கும்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு
வரலாறாக
இப்பாடம் அமைய இருக்கிறது.