தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-பாட முன்னுரை

3.0 பாட முன்னுரை

    அன்பார்ந்த     மாணவர்களே! இதுவரை இரண்டு
பாடங்களைப் பார்த்தோம். முதல் பாடத்தில் சிறந்த
மொழிபெயர்ப்பு என்பது எப்படி அமைய வேண்டும் என்றும்
எவை சிறந்த மொழிபெயர்ப்புகள் என்றும் அறிந்து
கொண்டீர்கள். இரண்டாம் பாடத்தில் இலக்கிய
மொழிபெயர்ப்புகள் என்ற தலைப்பில் நம் பழந்தமிழ்
மொழியோடு தொடர்பு கொண்டு இருந்த மொழிகள் பற்றியும்
அவற்றிலிருந்து சொல். பொருள். இலக்கியங்கள் எவ்வாறு
மொழிபெயர்க்கப்பட்டு அமைந்தன என்பது பற்றியும், தமிழில்
பெயர்க்கப்பட்ட இலக்கியங்கள் பற்றியும், உள்நாட்டு
அயல்நாட்டு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதையும்
அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் பிற துறை சார்ந்த
மொழிபெயர்ப்புகள் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறீர்கள்.
குறிப்பாக, தமிழிற்குப் புதுவரவாக உள்ள அறிவியல், தொழில்
நுட்ப நூல்கள் மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்றை அறிய
இருக்கிறீர்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:42:50(இந்திய நேரம்)