Primary tabs
4.0 பாட முன்னுரை
தற்காலத்தில் இலக்கியத்துறையில் மேற்கொள்ளப்பட்ட
மொழிபெயர்ப்பு முயற்சிகளின் அறிமுகத்தை மாணவர்கள்
இந்தப் பகுதியில் அறியலாம்.
முதல் பாடத்தில் சிறந்த மொழிபெயர்ப்புகளையும்
இரண்டாம் பாடத்தில் இலக்கிய மொழிபெயர்ப்பு பற்றியும்
மூன்றாவது பாடத்தில் பிறதுறை மொழிபெயர்ப்புகள் பற்றியும்
அறிந்து கொண்ட நீங்கள் இப்பகுதியில் இக்காலத்தில்
இலக்கியத்துறையில் நடந்துள்ள மொழிபெயர்ப்பு முயற்சிகள்
பற்றி அறிய இருக்கிறீர்கள்.
மொழிபெயர்ப்பு வளர்ந்த வரலாற்றை முந்தைய
பாடங்களைப் படித்த போது அறிந்திருப்பீர்கள். இக்கால
இலக்கிய மொழிபெயர்ப்புகள் என்ற நிலையில், சிறுகதை,
புதினம், நாடகம், கட்டுரைகள், கவிதைகள், வாழ்க்கை
வரலாறுகள், இலக்கிய ஆய்வுக் கோட்பாடுகள் எனப்
பலவற்றை இந்தப் பாடம் உங்களுக்கு விரித்துக்கூற
முற்படுகிறது. மேலும் இந்திய மொழிகள், உலக மொழிகள்
போன்றவற்றிலிருந்து தமிழிற்கும், தமிழிலிருந்து மற்ற
மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட தன்மையை அறிவிக்க
முற்படுகிறது.