Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
தமிழும் பிறமொழிகளும் கொண்டுள்ள உறவை
மதிப்பிடுக.
தமிழ்மொழி தொன்மைக் காலத்தில் பழந்திராவிட மொழி
என்ற நிலையில் இருந்தது. அந்தப் பழந்திராவிட மொழிக்
கூறுகள் பலவற்றை அப்படியே கொண்டுள்ள மொழி தமிழ்
மட்டுமே. அப்பழந்திராவிட மொழியோடு சமஸ்கிருதம்
தொடர்பு கொண்டதால் முதலில் பிரிந்த மொழி கன்னடம்,
அதனைத் தொடர்ந்து தெலுங்கும் துளுவும் அதனைத்
தொடர்ந்து மலையாளம் என இன்றைய அளவில்
மொழிகள் பிரிந்தன.
தமிழோடு தொடக்கக் காலத்தில் நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்த மொழி சமஸ்கிருத மொழி ஆகும்.
அதிலிருந்து தமிழில் சொற்கள் பல வழக்கிற்கு வந்தன.
பிற்காலத்தில் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பாகவும்
தழுவல்களாகவும் தமிழில் இடம் பெற்றன. தமிழிலிருந்து
பிரிந்த மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம்
ஆகிய மொழிகளிலிருந்தும், இந்தியாவின் வடமாநிலங்களில்
வழங்கும் குசராத்தி, இந்தி, வங்க மொழி போன்ற
மொழிகளிலிருந்தும் உருவான இலக்கியங்கள்
தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. அம்மொழிகளுக்குத்
தமிழிலிருந்தும் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.