Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
பழங்காலத்தில் மொழிபெயர்ப்பு எவ்வாறு இருந்தது?
மொழிபெயர்க்கின்ற எண்ணம் தமிழைப் பொருத்த
வரையில் காலத்தில் முற்பட்டது எனலாம். மொழிபெயர்ப்பு
எண்ணம் பற்றிய செய்தியினை “மா பாரதம்
தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்”
பாண்டியர்கள் தமிழ் மொழியைக் காத்தனர் என்ற
தகவலைச் சின்னமனூர்ச் செப்பேடு சுட்டுகிறது.