Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
மோலியர் நாடகங்கள் தமிழில் வந்துள்ளது பற்றிக்
கூறுக.
பிரெஞ்சு மொழியை வளப்படுத்திய நாடக
ஆசிரியர்களுள் மோலியர் முதன்மையானவர். அவரது
நாடகங்கள் பல தமிழில் மொழிபெயர்ப்புகளாகவும்
தழுவல்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தி நேவரி ஆப்
ஸ்கால்பின் என்ற மோலியருடைய நாடகத்தைப் பம்மல்
சம்பந்த முதலியார் காளப்பன் கள்ளத்தனம் என்ற பெயரில்
தழுவலாக அமைத்துள்ளார்.
இதே நாடகத்தை பி.ஸ்ரீ.ஆச்சார்யா என்பவர், குப்பன்
பித்தலாட்டங்கள் எனத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
மோலியரின் சிறப்பு மிக்க நாடகங்கள் இரண்டனை
கே.எஸ். வெங்கட்ராமன் என்பவர் இரு நாடகங்கள் என்ற
படைப்பாக வெளியிட்டுள்ளார்.