தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.4-ஒலியன் மரபு மீறல்

5.4 ஒலியன் மரபு மீறல்

 

    தமிழ் மொழியின் இலக்கண விதிகளுக்கு மாறாக ஒலியன்
மரபானது விளம்பரங்களில் மீறப்பட்டிருக்கின்றது.


5.4.1 ஆய்தம்


    தமிழில் ஆய்தம் மொழிக்கு முன் வராது என்பது மரபு. ஆனால்
விளம்பரங்களில் மொழி முதல் ஆய்தம், ஆங்கில எழுத்தான
F ஐக் குறிக்கப் பகரத்துடன் சேர்த்து எழுதப்படுகின்றது.

ஃப்யூஷன் டிசைன்கள்

ஃபிரைடு ரைஸ்

ஃபேன்கள்


5.4.2 மெய்


    தமிழ் இலக்கண மரபின்படி, மெய்மயக்கங்கள் மொழிக்கு
முதலில் வராது. இது தமிழுக்கே உரிய சிறப்பாகும். ஆனால் விளம்பரங்களிலோ இவ்விதி மீறப்பட்டுள்ளது,

க்ரீம்; ச்யவன பிராஷ்; ப்ரொடக்ட்ஸ்; ப்ரூ காபி;
ட்ராலி சூட்கேஸ்; த்ரீ ரோஸஸ்;
வ்யாஸ முனிவர்

மொழியின் இடையிலும் கடையிலும் கூட வழக்காற்றினை மீறிய
ஒவ்வாத மெய்ம்மயக்கங்கள் விளம்பர மொழியில் இடம்
பெறுகின்றன.

இடையில்: போர்ன்விடா; டிடர்ஜெண்ட்

கடையில்: லக்ஸ்; மார்க்


5.4.3 டகரம், ரகரம், லகரம்


    இலக்கண நூல்கள் டகரம், ரகரம், லகரம் ஆகியன மொழிக்கு முதலில் தமிழில் வாரா என்று உரைக்கின்றன. ஆனால் விளம்பரத் தமிழில் அவை மொழிக்கு முதலில் இடம் பெறுகின்றன.

  1. டயர், டாக்டர், டோக்கன், டேப் ரெகார்டர், டொமாட்டோ
    சாஸ், டீலர், டூத் பேஸ்ட்
  2. ரீஃபில் பேக், ருசி, ரெப்ரிஜிரேட்டர், ரேசர், ரொக்கப் பரிசு
  3. லக்ஸ், லுங்கி, லிப்டன் டீ, லூப்ரிகேட் ஆயில், லைம் லைட்,
    லேபரட்டரீஸ்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:58:59(இந்திய நேரம்)