Primary tabs
p20213 தோத்திரம் (திருமுறைகள்)
பழந்தமிழ்ச்
சமயங்களில் ஒன்று சைவ சமயம்.
இச்சமயத்தின் முழுமுதல் தெய்வம் சிவபெருமான்.
அவன்
எந்நாட்டிற்கும் உரியவன் எனப் போற்றப்
பெறுபவன்.
அப்பெருமானைச் சமய உணர்வில் ஆழ்ந்து
திளைத்த
அருளாளர்கள் போற்றிப் பாடினார்கள். அவ்வாறு போற்றிப்
பாடிய அருளாளர்களின் பாடல்களைத் திருமுறைகள் என்று
குறிப்பிடுவர். அத்திருமுறைகளைப் பற்றிய
செய்திகள்
இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.
திருமுறைகளின் எண்ணிக்கை,
அவற்றைப் பாடிய
அருளாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்
இப்பாடத்தில்
இடம் பெறுகின்றன. மேலும்
திருமுறைகளில்
இடம்பெற்றுள்ள நூல்களின் சிறப்புகளும் இப்பாடத்தில்
எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன.
-
சைவ சமயத்தின் அருட் கவிதைகளாகிய திருமுறைகள்
யாவை என்பதை உணரலாம். -
திருமுறைகளின் பகுப்பு முறைகளைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம். - திருமுறைகளைப்
பாடியருளிய நூலாசிரியர்களின்
வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாம். - திருமுறைகளில்
காணப்பெறும் கவிதையின் சிறப்பையும்
அருளாளர்களின் அருளிப்பாடுகளையும் தெரிந்து
கொள்ளலாம்.