Primary tabs
தொடக்க காலத்தில் இலக்கியங்கள் செய்யுள் வடிவில்
படைக்கப் பட்டமையும், பின்னர், தாள், அச்சு இயந்திரக்
கண்டுபிடிப்புகளால் உரைநடை வளர்ச்சி பெற்று, அதனால்,
கவிதை, நாவல், சிறுகதை, நாடகம் ஆகியவை படைப்பிலக்கிய
வகைகளாகப் படைக்கப்பட்டமையையும் கற்றோம். மேலும்,
படைப்பிலக்கியம் தோன்றுவதற்குரிய காரணங்கள், பயன்கள்,
படைப்பாளனின் தகுதிகள் ஆகியவற்றையும் இப்பாடத்தின்
மூலம் கற்றுக் கொண்டோம்.