தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செம்மையாக்கக் குறியீடுகள்

2.5 செம்மையாக்கக் குறியீடுகள்

    செய்திகளில் இடம்பெறும் சொற்கேளாடு பொருத்தமுறப்
பயன்படுத்தப்படும் குறியீடுகளும் செய்தியின் உணர்ச்சியை
வாசகர் சரியாக உணரத் துணைசெய்கின்றன. செம்மையாக்கக்
குறியீடுகளை எங்கெங்குப் பயன்படுத்துவது என்னும்
விவரங்ளும் முழுமையாகத் தெரிந்திருந்தால் அது செய்தியின்
மதிப்பை உயர்த்தும்.

    தமிழ் நாளிதழ்களில் பொதுவாகக் கீழ்க் காணும்
செம்மையாக்கக் குறியீடுகளே பயன்படுத்தப்படுகின்றன. அவை:

1
கேள்விக்குறி
?
2
ஆச்சரியக்குறி
!
3
கால்புள்ளி
,
4
அரைப்புள்ளி
;
5
முக்கால்புள்ளி (கோலன்)
:
6
முற்றுப்புள்ளி
.
7
ஒற்றை மேற்கோள்
‘ ’
8
இரட்டை மேற்கோள்
“ ”
9
சிறுகோடு
-

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:12:24(இந்திய நேரம்)