தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 3-P20443 - மொழிநடையும் திருத்தமும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இதழியலுக்கென்று பயன்படுத்தப்பட வேண்டிய மொழி
நடை சிறப்பாக அமைய என்ன செய்யவேண்டும் என்பதும்,
மொழிநடை நூல்கள் என்ன கூறுகின்றன என்பதும்
இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.

    பிழையின்றித் தெளிவாக, சுருக்கமாக, வாசகர்
விரும்பும்படி எவ்வாறு மொழிநடை அமைய வேண்டும்
என்பதையும் விளக்குகிறது.

    இதழ்களில் சில மொழிநடை அமைப்புகளை எவ்வாறு
வெளியிடக்     கூடாது     என்பதையும்,     அதற்கான
திருத்தங்களையும் இப்பாடம் குறிப்பிடுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறலாம்.

இலக்கியக் கட்டுரைகளின் மொழிநடைக்கும் இதழ்களின்
மொழிநடைக்கும்     உள்ள     வேறுபாடுகளை
அறிந்துகொள்ளலாம்.
முற்கால இதழ்களின் மொழிநடை அமைப்பு எவ்வாறு
இருந்தது என்பதை அறியலாம்.
இதழ்களின் மொழிநடை வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும்
திரு.வி.க எவ்வாறு உதவினார் என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.
ஒவ்வொரு பத்திரிகையின் மொழிநடை அமைப்பும்
வெவ்வேறாக இருந்தாலும் வாசகர்கள் முழுமையாகப்
புரிந்துகொள்ள வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்
என்பதை உணரலாம்.
இதழியல்     மொழிநடை     அமைப்பில் எவ்வாறு
திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்; பண்டிதர்களின்
சொற்களை வாசகர்கள் புரிந்து கொள்ளுமாறு புதிய
எளிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது
போன்ற செய்திகளை அறியலாம்.
வெளிமாநில,     வெளிநாட்டு இடப்பெயர்களையும்
இயற்பெயர்களையும்     இதழ்களில்     எவ்வாறு
வெளியிடவேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:12:50(இந்திய நேரம்)