தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.8 தொகுப்புரை

1.8 தொகுப்புரை


    நாட்டுப்புற மரபு என்றால் என்ன? என்பது பற்றியும் நாட்டுப்புற
மக்களின் வழக்கத்தில் இருந்துவரும் சடங்கு மற்றும் நம்பிக்கைகளைப்
பற்றியும் ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சடங்குகள்
கூட்டாக நிகழ்த்தப்படும் தன்மையைப் பெற்றிருப்பதால் சமூக வாழ்வில்
ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. மக்களை ஒன்றிணைக்கிறது. நாட்டுப்புற
மக்களின் வாழ்வோடு ஊறிப்போய் உள்ள நம்பிக்கைகள் அவர்களைப்
பாதுகாக்கின்றன. வழி நடத்துகின்றன. மன உளைச்சல் ஏற்படும்
போதெல்லாம் தக்க மருந்தாய்ச் செயல்படுகின்றன. புதிய நாகரிகம்
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து வந்தாலும்
மரபு ரீதியான சடங்கு முறைகளையும் நம்பிக்கைகளையும் மக்கள்
மாறாமல் பின்பற்றி வருகின்றனர். இது மக்கள் சடங்கு மற்றும்
நம்பிக்கைகளின் மேல் கொண்டுள்ள நம்பகத் தன்மையை
உறுதிப்படுத்துவதாக உள்ளது. அறிவியல் நோக்கு என்ற வண்ணக்
கண்ணாடியை அணிந்து கொண்டு சடங்குகளையும் நம்பிக்கைகளையும்
மூட நம்பிக்கைகளின் பாற்பட்டவை என்று ஒதுக்குவது முறையாகாது.
குறிப்பிட்ட மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு இந்த
வண்ணக் கண்ணாடி பொருந்தாது என்பதே உண்மை. சடங்கு
நிகழ்வுகளையும் நம்பிக்கைகளையும் பண்பாட்டுப் பின்புலத்தில் ஆழ்ந்து
நுணுகிப் பார்ப்பது புதிய தேடலுக்கும் புரிதலுக்கும் வழிவகுக்கும்
என்பதில் ஐயமில்லை.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1.

நம்பிக்கைகளின் தோற்றத்திற்குக் கூறப்படும் காரணம் யாது?

2.

நாட்டுப்புற நம்பிக்கைகள் எவ்வாறு பகுக்கப்
பட்டுள்ளன?

3.

பல்லி சகுணம் குறித்த நம்பிக்கை இரண்டினை எழுதுக.

4.

கண்ணேறு என்றால் என்ன?

5.

சோதிடத்தில் பயன்படுத்தப் படும் பறவை எது?
அச்சோதிடத்தின் பெயர் என்ன?



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:13:56(இந்திய நேரம்)