தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 4.8

  • 4.8 தொகுப்புரை

    இப்பாடப்பகுதியில் வள்ளுவர் கூறும் அன்பின் சிறப்பினையும்,
    இனிய சொற்களைப் பேசுவதினால் ஏற்படும் நன்மைகளையும்
    வள்ளுவர் கூறியவண்ணம் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நடுவு
    நிலைமை பிறழக் கூடாது; அது தம் வழித்தோன்றல்களையும்
    பாதிக்கும். மேலும், உலக நடையுடன் ஒத்து நடந்து பிறருக்கு
    உதவவேண்டும்; பிறரின் தேவையை அறிந்து ஈகை செய்ய
    வேண்டும்; அவ்வாறு செய்தால் நிலைத்த புகழ் கிடைக்கும்;
    அதுதான் உயிர் வாழ்வதின் சிறந்த பயன் என்கிறார் வள்ளுவர்.
    இவற்றையெல்லாம் அவர் எங்கிருந்து பெற்றார்? தமிழர்களின்
    வாழ்விலிருந்து. ‘சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்‘
    என்பது தமிழ்ப் பழமொழி. தமிழ்ச் சமுதாயத்தில் இருந்து
    பண்பாட்டை அற இலக்கியமாக வள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார்.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - II


    1.


    பிறன்இல் விழையாமை என்றால் என்ன?

    2.

    பிறனது எல்லாப் பெருமைகளையும் எது
    கெடுத்துவிடும்?

    3.

    பிறன் மனைவியை விரும்பாத பேராண்மை
    உடையவர்க்கு என்ன சிறப்புகள் கிடைக்கும்?

    4.

    குடிநீர்க்குளத்தை, வள்ளுவர் எதனோடு
    ஒப்பிடுகிறார்? ஏன்?

    5.

    ஈகை என்பது எது?


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:01:02(இந்திய நேரம்)