தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D03111-விடை


தன் மதிப்பீடு - II : விடைகள்

2.

தலைவி அறத்தொடு நிற்கும் கிளவிகள் யாவை?

தலைவி அறத்தொடு நிற்கும் கிளவிகள் ஏழு ஆகும்.
அவையாவன :

1) தோழி தன் கண்ணீரைத் துடைத்தபோது அதை ஒரு
வாய்ப்பாகக் கொண்டு, தான் கலங்கி நிற்பதற்கான
காரணத்தைக் கூறுதல்.

2) தலைவன் தெய்வத்தைச் சான்றாக வைத்துத் தன்னை
மணந்து கொள்ளும் உறுதி கூறியதை வெளிப்படுத்துதல்.

3) அவ்வாறு கூறிய பிறகு தலைவன் தன்னை விட்டு
நீங்கியதை, தோழியிடம் கூறுதல்.

4) தோழி, தலைவனின் பண்புகளைப் பழித்துக் கூறுதல் ;
அது கேட்ட தலைவி தலைவனது பண்புகளைப் புகழ்ந்து
கூறுதல்.

5) தெய்வத்தை வேண்டிக் கொள்ள இருவரும் செல்வோம்
என்று தலைவி கூறுதல்.

6) தன் தாய் தன்னை வீட்டுக்காவலில் வைத்தாள் என்று
தோழியிடம் கூறுதல்.

7) செவிலித் தாய் இரவு நேரத்தில் தலைவன் வந்ததைப்
பார்த்து விட்டாள் என்று தோழியிடம் கூறுதல்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:13:07(இந்திய நேரம்)