Primary tabs
தன் மதிப்பீடு -
II : விடைகள்
பாங்கி அறத்தொடு நிற்கக் காரணங்கள் யாவை?
செவிலித்
தாய் தலைவியின் உடல் தோற்றத்திலும்,
செயல்பாடுகளிலும் நிகழ்ந்துள்ள
மாறுபாடுகளைப் பற்றி
ஐயப்பாட்டை எழுப்பி வினவிய
போது மட்டுமே, பாங்கி
அறத்தொடு நிற்பாள். மேலும், செவிலி வெறியாட்டு என்னும்
செயல்பாட்டின் மூலம் வேலனைக்
கொண்டு நிகழ்த்தும்
வழிபாட்டைத் தடுத்து வெறிவிலக்கும்
போது தலைவியின்
காதலைப் பற்றிய உண்மைக் காரணத்தைக் கூறி அறத்தொடு
நிற்பாள்.